Headline

جاري تحميل اخر الاخبار...

اختراعات وتكنولوجيا

قصص وعبر

عالم المرأة

Friday, August 26, 2016

கத்தார் நாட்டில் பொது மன்னிப்பு!



கத்தார் நாட்டில் பொது மன்னிப்பு! 
கத்தாரில் இருந்து மூன்று மாதத்திற்குள் வெளியேறலாம்!


கத்தார் நாட்டு உள்துறை அமைச்சின் உத்தியோகபூர்வ முகநூல் பக்க செய்தியில் கட்டார் நாட்டில் தொழில் புரிவதட்காக வந்து பல்வேறு காரணங்களால் தத்தமது குடியிருப்பு அனுமதியினை (Residency Permit) புதுப்பித்துக் கொள்ளத் தவறிய சட்ட விரோத குடியிருப்பாளர்கள் எவ்வித சட்ட நடவடிக்கையும் இன்றி கத்தார் நாட்டில் இருந்து வெளியேறிச் செல்வதட்கான பொது மன்னிப்பினை வழங்கவுள்ளதாக கத்தார் நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது
اقرأ المزيد

மக்கா ஹரமில் தவாஃப் செய்யும் இடங்களில் தொழுகைக்கு அனுமதியில்லை!


சவூதி அரேபியா முஸ்லிம்களின் புனித இடமான மக்காவில் வழக்கமாக தவாஃப் செய்யும் பகுதியில் ஹஜ் காலம் முடியும்வரை தொழுகைக்கு அனுமதி இல்லை.

மக்கா பிரதேச கவர்னர் இளவரசர் காலித் அல் பைஸல் அவர்களின் உத்தரவின்படி, ஹஜ் யாத்ரீகர்கள் சங்கடங்கள் இன்றி வசதியாக தவாப் செய்திடும் வகையில் (ஆகஸ்ட் 25) முதல் ஹஜ் காலம் முடியும் வரை, புனித மடஃப் (Mataf) எனும் தவாப் சுற்றும் பகுதியில் மட்டும் தொழுகைக்கான அனுமதி கிடையாது.

ஹஜ் யாத்ரீகர்களும் இன்ன பிறரும் பள்ளியின் உள் வளாகங்களிலும், மாடிகளிலும், சுற்றுப்புறங்களிலும் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதே உத்தரவு புனித ரமலான் காலங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
اقرأ المزيد

நபிகள் நாயகம் அவர்கள் ஏழு செயல்களைச் செய்யும்படி கட்டளையிட்டார்கள்!!!


நபி(ஸல்) அவர்கள் ஏழு செயல்களைச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்----

1. நோயாளிகளை நலம் விசாரிப்பது.

2. ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது.

3. தும்மியவருக்கு அவர், “அல்ஹம்துலில்லாஹ்“ (“அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்“ என்று) சொன்னால், “யர்ஹமுக்கல்லாஹ்“ (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக!) என்று பிரார்த்திப்பது.

4. சலாமுக்கு (முகமனுக்கு) பதிலுரைப்பது.

5.அக்கிரமத்திற்குள்ளானவருக்கு உதவுவது.

6. விருந்துக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்வது.

7. சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்ற உதவுவது.
(ஷஹீஹ் புகாரி 2445)

- நபிகள் நாயகம்.
اقرأ المزيد

விதவைகளை குறைவாக கொண்டது முஸ்லிம் சமுதாயம்!

விதவைகளை குறைவாக கொண்டது முஸ்லிம் சமுதாயம்: 2011 சென்சஸ் அறிக்கை!

இந்தியாவில் பிற மதத்தினரை விட இஸ்லாமிய சமூதாயத்தில் விதவைகள் மிகக் குறைவு என்று 2011 சென்சஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
முஸ்லிம்களிடையே அதிகளவிலான விவாகரத்து எண்ணிக்கை இருக்கிறது என்று செய்தி பரப்பப்பட்டு வரும் இன்றைய தேதிகளில் இந்த தகவல் நிதர்சனத்தை மக்களுக்கு உணர்த்தியுள்ளது. 

மேலும் விவாகரத்து மற்றும் தம்பதிகளின் பிரிவு கிறித்தவ மற்றும் புத்த மத சமூகத்தினரிடையே அதிகமாக உள்ளது என்று தெரியவந்துள்ளது.
விதவைகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை முஸ்லிம்களை விட இந்து மதம் மற்றும் சீக்கிய மதத்தினரிடையே அதிகமாக உள்ளது. 

பெளத்த சமூகத்தில் 100.3% விதவைகளும், கிறித்தவ சமூகத்தில் 97% சதவிகிதமும், இந்து சமூகத்தில் 88.3% விதவைகளும், சீக்கிய சமூகத்தில் 88.2% சதவிகிதமும், ஜைன மதத்தினரில் 79.6% விதவைகளும், முஸ்லிம் சமூகத்தில் 72.2% விதவைகளும் உள்ளனர் என்று 2011 சென்சஸ் தெரிவிக்கிறது.

اقرأ المزيد

ப்ளாக்கரில் HTTPS பாதுகாப்பு வசதி அறிமுகம்


ஒவ்வொரு நாளும் இணையம் வளர்ச்சி அடைந்துக் கொண்டே வருகிறது. அதே நேரம் இணைய தாக்குதல்களும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இணைய தாக்குதலிலிருந்து பாதுகாப்பு பெற HTTPS வசதியை ப்ளாக்கர் தளம் அறிமுகப்படுத்தியுள்ளது.



HTTPS என்றால் என்ன?

பாதுகாப்பான மீயுரை பரிமாற்ற நெறிமுறை (HTTPS) என்பது ஒரு கணினி பிணைய இயக்க இணையத்தில் பாதுகாப்பான முறையில் எந்த ஒரு தகவலையும் (Software deployment) பயன்படுத்தும் ஒரு தகவல் தொடர்பு நெறிமுறை ஆகும். இதுவரை இணையத்தில் ஒரு முகவரியைக் கொடுக்கும் போது ஹெடிடிபி(http) என்றே கொடுக்கப்பட்டு வந்தது. அறிவியல் வளர்ச்சியின் போக்கால் நமது இணைய தகவல் திருடப்பட்டு தவறான வழிகாட்டுதலுக்கு உள்ளாக்கப்படக்கூடாது என்ற யோசனையில் httpயை விடுத்து போக்குவரத்து அடுக்கு பாதுகாப்புக்காக (SSL/TLS) https (hyper text transfer protocol secure) அதாவது பாதுகாப்பான மீயுரை பரிமாற்ற நெறிமுறை பயன்படுத்தப்படுகிறது.- Wikipediaசுருக்கமாக சொன்னால் ஒரு இணையதளத்திற்கும், அதன் பார்வையாளர்களுக்கும் இடையில் நடைபெறும் தகவல் பரிமாற்றத்தை பாதுகாக்கும் முறை ஆகும்.
اقرأ المزيد

பேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி?

பேஸ்புக் நிறுவனம் எந்தளவு பிரபலமடைந்துள்ளது என்பதை மற்றவர்களைவிட பதிவர்களுக்கு நன்றாக தெரியும். ப்ளாக்கில் பதிவெழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது பேஸ்புக்கில் மட்டுமே இயங்கி வருகின்றனர். தற்போது பேஸ்புக்கை திறந்தாலே வீடியோக்கள் தான் நிரம்பி வழிகின்றது. இந்த பதிவில் பேஸ்புக் வீடியோவை மிக எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.



பேஸ்புக் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி?

1.பேஸ்புக் வீடியோவை ப்ளே செய்யுங்கள்.
2.வீடியோவில் ரைட் க்ளிக் செய்து "Show URL" என்பதை க்ளிக் செய்யுங்கள்.
3.அந்த முகவரியை Address Bar-ல் Paste செய்யுங்கள்.
4.அதில் www என்பதை நீக்கிவிட்டு m என்று கொடுங்கள்.
5.புதிய முகவரி இப்படி இருக்கும். https://m.facebook.com/whatzupvidz/videos/826508124099459/
இப்போது வீடியோவை ப்ளே செய்யுங்கள்.
6.வீடியோவில் ரைட் க்ளிக் செய்து "Save Video as" என்பதை க்ளிக் செய்து உங்கள் கணினியில் சேமித்துக் கொள்ளுங்கள்.
اقرأ المزيد

منوعات

الموسوعة الاسلامية

الصحة ورعايتها

غرائب و عجائب